மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தெலங்கானாவில் ரயில்பெட்டி தொழிற்சாலை!

தெலங்கானாவில் ரயில்பெட்டி தொழிற்சாலை!

தெலங்கானா மாநிலத்தில் ரயில்பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காக விரைவில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.டி.ஐ நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தெலங்கானாவில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுடன் அக்டோபர் 27க்கு முன்னதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்" என்றார்.

இதுகுறித்து தென்னிந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ரயில்வே பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான 200 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாநில அரசு கையகப்படுத்தி தரும். இதுகுறித்து அண்மையில் தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் ஸ்ரீஹரியுடன் ரயில்வே துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்" என்றார்.

இந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவுகள், இடம், முதலீடு உள்ளிட்ட தகவல்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது தெரிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon