மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு!

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு!

குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என புலிகள் காப்பாக வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் வனப்பகுதியை ஒட்டியுள்ளப் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது.

இங்கு உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தனியார் விடுதிக்குள் சென்று விடுதி அறையில் உள்ள மின் விளக்குகள், ஏசி, கட்டில், மெத்தை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்துவதாக குற்றம் எழுந்ததோடு புகாரும் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேக்கடி புலிகள் காப்பாக வனத்துறையினர் விடுதிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது இழப்பீட்டை மதிப்பீடு செய்து அதற்கான தொகையை வழங்குவதாகவும், குரங்குகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon