மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

விஜய பாஸ்கர் ஒரு தீர்க்கதரிசி : அப்டேட்குமாரு

விஜய பாஸ்கர் ஒரு தீர்க்கதரிசி : அப்டேட்குமாரு

டெங்குவை விரைவில் ஒழிப்போம்னு அமைச்சர் ஜோசப் விஜயபாஸ்கர் சொன்னது நடந்துருச்சு.. ஐய்யயோ வெறும் விஜயபாஸ்கர் தான் மன்னிச்சுருங்க. காலையில இருந்து அந்த நியூஸையே அடிச்சுட்டு வந்ததால குமார் கன்பியூஸ் ஆயிட்டான். ஆமா என்னைய மாதிரி எத்தனை பேரை குழப்பிருப்பாரு. இப்படி தாங்க கலவரமெல்லாம் உருவாகுது. சரி விஷயத்துக்கு வருவோம். பப்பாளி இலையைக் கொண்டு விரட்ட முடியாத டெங்குவை, நிலவேம்பு குடிச்சு ஒழிக்க முடியாத டெங்குவை மெர்சலை கிளப்பி ஒழிச்சுட்டாங்களே..இதை தான் அமைச்சர் அப்பவே சொல்லிருக்காரு. நாம தான் அவரை புரியாம பேசிட்டோம். ஒரு வழியா எல்லா நியூஸ் சேனலுக்கும் விவாதத்துக்கு டாபிக் கிடைச்சது. என்ன ஒன்னு.. இன்னைக்கு டெங்குனால எத்தனை பேரு செத்தாங்கன்னு தான் தெரியல. அதுவா முக்கியம், வாங்க அப்டேட்ட பார்ப்போம்.

மெத்த வீட்டான்

பாஜக கூட்டத்தை காட்ட மெர்சல் படம் ஓடுற தியேட்டர் அருகில் ஒரு மீட்டிங் போடலாம்...!

ArunPandiyan

ரெட்மீ நோட் 4 விளம்பரம்.

"இந்தியாவில் நாலரை லட்சம் பேர் தேர்ந்தெடுத்த போன் நல்லாத்தானே இருக்கும்?"

நாங்க மோடியவே தேர்ந்தெடுத்தோம் போவியா?

பாலா‏

இப்பிடி எல்லாம் பண்ணிட்டு இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுல ஒரு ஓட்டு விழுகாது

சரி, அப்ப பண்ணாம இருந்தா?

அப்பவும் ஒரு ஓட்டும் விழுகாது

Boopathy Murugesh

மெர்சலுக்கு ராகுல் காந்தி ஆதரவு.

கடைசில விஜய் அண்ணா டிரம்போட பேசுற மாதிரி ரசிகர்கள் பண்ண போட்டோஷாப் உண்மையாகிடும் போலவே.

கயவன்

செய்தி : சிங்கப்பூரை விட, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவு- விஜயபாஸ்கர்

அதான செத்ததெல்லாம்

மர்மகாய்ச்சல் 29 பிரிவின்

கீழதான...

Thaadikkaran

முன்னாள் முதல்வர்

ஜெயலலிதாவை நேரடியாக

எதிர்த்த தலைவர்களில் நானும் ஒருத்தி-தமிழிசை

எதிர நின்னு பேசுனது எல்லாம் எதிர்த்து பேசுனதா ஆயிருமா.!

CreativeTwitz

சலூன் கடை டிவில நயன்தாரா வர சீன் வரப்ப குப்புற கவுத்து பின்மண்டைய வெட்டுரதெல்லாம் கும்பிபாக வகையறா…

மெத்த வீட்டான்

டெங்கு காய்ச்சல் ஒளிந்துக்கொண்டது..

மெர்சல் பிரச்சினையில்

அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சல் விரைவில் ஒழியும்னு இதைத்தான் சொன்னார் போல!

யுகராஜேஸ்

சிங்கப்பூரை விட தமிழகத்தில் டெங்குப் பாதிப்பு மிகவும் குறைவு- விஜயபாஸ்கர்#ஆனா சிங்கப்பூரை விட ஊழல் பாதிப்பு தமிழகத்தில் மிகவும் அதிகம்ண்ணே?

யாத்ரீகன்

குழந்தை பிறந்ததும் நல்ல பெயரா சொல்லுங்கன்னு நம்மகிட்ட கேட்கிறது, கொஞ்ச நாள் கழிச்சு என்ன பேருன்னு கேட்டா அப்பத்தா பேர வச்சாச்சின்னு சொல்றது.

தமிழினி

மோடிக்கு முன்பும் அதிமுக இருந்தது மோடிக்கு பின்பும் அதிமுக இருக்கும்- மைத்ரேயன்

இருக்கும்றத வெத்தலைல மை போட்டு தெரிஞ்சிட்டிங்களா "மை"த்ரேயன்

மெத்த வீட்டான்

வட மாநிலங்களில் மோடியை சமாளிக்க திணறும் எதிர்க்கட்சிகள்..

தமிழகத்தில் மெர்சல் படத்தை சமாளிக்க முடியாமல் திணறிய மோடி...!

கோழியின் கிறுக்கல்

வேட்டையாட வலு இல்லாதவர்கள் கூட சைவமாக மாறி இருக்கலாம்!!!

BoopatyMurugesh

மெர்சலில் டாக்டர்களை தவறாக காட்டியுள்ளனர் - மருத்துவர் சங்கம்

படத்துல இஞ்சினீயரு சந்தோசமா இருக்க மாதிரி தவறா காட்றாங்க.. நாங்க கோவப்பட்டோமா?

Kannan

வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்

-RBI

விட்டா இரண்டு பேரின் ஆதார் எண் பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம்னு அறிவிச்சிடுவாங்க போலவே!

Bhoobalan

3 ஏக்கர் விவசாய நிலம் உள்ள 4 பேர் கொண்ட குடும்பம் நேர்மையாய் வயலில் மட்டும் தலைமுறைக்கும் உழைத்தாலும் ஒரு ஆல்டோ கார் கூட வாங்க முடியாது....

சொல் வித்(து)வான்

இணையத்தில் புதிய படங்களை சட்டவிரோதமாக பார்த்தேன் என்ற H.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் -விஷால்

"இது நம்ம லிஸ்ட்லையே இல்லயே?" மொமண்ட்

வாசுகி பாஸ்கர்

ராகுல்: "நீ பாட்டுக்கு வீட்லையே இருக்க, என்னைய பிரதமர் ஆக்குற ஆசையிருக்கா இல்லையா?

சோனியா: "டோன்ட் வொரி மை சன், அதுக்கு என்னைய விட மோடி தான் அதிகமா உழைக்குறாப்டி"

HAJAMYDEENNKS

மெர்சல் தந்த குடைச்சலில் இனி தியேட்டரில் போய் படம் பார்க்க ஆதார் கட்டாயம்னு சொல்ல போறாரு மோடி...!

புகழ்‏

ஆதாரமற்ற செய்திகள் எந்த பட வசனத்திலும் இடம் பெறக்கூடாதென்றால்..எல்லா பக்திப் படங்களுமே தடை செய்யப்படணுமா..எனக் கேட்கிறார் அந்த ஏழை விவசாயி.

நக்கல் மன்னன் 2.0

பாஜக தமிழ்நாட்டில் வளரக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ்காரர் குமரி ஆனந்தன் தன் மகள் தமிழிசையை பாஜகவுக்கு அனுப்பி வைத்தார் என்பது நம்மில் கித்னா பேருக்குத் தெரியும்

புன்னகை அரசன்

இண்டர்வியூவில் எவ்வளவு அழகா பதில் சொன்னாலும் நம்மள நீக்க இரண்டு கேள்விகளே போதும்

அரியர்ஸ் இருக்கா

எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா

செங்காந்தள்

டெங்குவை ஒழித்ததில் தீபாவளிப் பட்டாசு, பப்பாளி இலைச்சாறு, நிலவேம்புக் கசாயத்தை விட மெர்சலின் பங்கு அதிகம்...!!!

யுகராஜேஸ்

பாராளுமன்ற தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - வாசன்

ஏண்ணே!! உங்களுக்கும் மோடி சொன்ன அந்த 15 லட்சம் தேவைப்படுதா?

வாசுகி பாஸ்கர்

எங்க அப்பா கேரளாவுல பொறந்து இருந்தா முதல்வர் ஆகியிருப்பார் ன்னு அன்புமணி வருத்தத்தோடு சொல்றாராம், சாதி முத்திரை விழுதுன்னு சொல்றாராம்.

மக்கள் மன்றத்தில பாண்டே சொல்லிட்டு இருக்கார்.

காக்கா பிரியாணி துன்னா உன்னிகிருஷ்ணன் குரலா வரும்.

கருப்பு கருணா

இந்த வார நீயா நானா நிகழ்ச்சி நிறுத்தம்.

சரிப்பா... இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மெர்சலாகி அதிகம் வறுபட்டது தமிழிசையா..மோடியா...ஹெச் ராஜாவான்னு ஒரு விவாதம் நடத்துங்க...

டி ஆர் பி ரேட்டெல்லாம் எக்கச்சக்கமா எகிறிடும் சார்!

-லாக் ஆஃப்

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon