மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 11 டிச 2019

திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை: அமைச்சர்!

திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை: அமைச்சர்!

அதிமுக அரசு சிறப்புடன் செயல்படுவதை திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,கொசுக்களை ஒழித்து விட்டால் டெங்குவை முற்றிலும் ஒழித்து விடலாம். டெங்கு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்கு உள்நோக்கம் கற்பிக்க கூடாது. மத்திய அரசு உதவியில்லாமல் எல்லா திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. மாநிலத்திற்கு தேவையான நிதியை பெறுவதற்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்.

திமுக ஆட்சியில் இருந்தபொழுது மத்திய அரசிடம் உரிமைகளை பறிகொடுத்தனர். அதிமுக அரசு சிறப்புடன் செயல்படுவதை திமுகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon