மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

பெருகும் போலி மருத்துவர்கள்!

பெருகும் போலி மருத்துவர்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு பல போலி மருத்துவர்கள் உருவாகியுள்ளனர். இதனால், டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே வேளையில் போலி மருத்துவர்களைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், உள்ளாட்சி அதிகாரிகள் வீடுதோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருவண்ணாமலையில் 100 போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று (அக்டோபர் 21) மட்டுமே 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுமட்டுமல்லாமல், மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து,மாத்திரை வழங்கி வந்த 12 கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரை வழங்கினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மருந்து கடைகளை கண்காணிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 630 மருந்துக் கடைகளுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon