மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

தொழில்நுட்ப பொறியாளர்: புறக்கணிக்கப்படும் பெண்கள்!

தொழில்நுட்ப பொறியாளர்: புறக்கணிக்கப்படும் பெண்கள்!

தொழில்நுட்ப நிறுவனங்களில் வெறும் 26 சதவிகிதப் பெண்கள் மட்டுமே பொறியாளர் பணிகளில் உள்ளனர் என்று பிலாங் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாலின இடைவெளி குறித்து இந்நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களின் பங்கு 34 சதவிகிதம் தான் உள்ளது. அதிலும் பொறியியல் சார்ந்த பணிகளில் பெண்களின் இருப்பு 26 சதவிகிதம் தான் உள்ளது. அதாவது மூன்று ஆண் பொறியாளர்கள் இருந்தால் ஒரு பெண் பொறியாளர் மட்டும்தான் உள்ளார்.

தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேல் பொறியியல் துறை பணிகளில் இருக்கும் பெண்களில் 45 சதவிகிதம் பேர் அதன் மையப் பணிகளில் இருந்து வெளியேறிவிடுகின்றனர். இங்கிருந்து வெளியேறிச் செல்லும் பெண்களில் பலர் மார்க்கெட்டிங், உற்பத்தி மேலாண்மை, கன்சல்ட்டிங் போன்ற பணிகளுக்கே செல்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் தொழில்நுட்ப பணிகளில் பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் சோதனை பணிகளுக்கே உட்படுத்தப்படுகின்றனர்.'

இந்த சோதனைப் பணிகளில் ஒவ்வொரு 100 பணிகளுக்கும் 66 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான தகவல் சுமார் 3 லட்சம் பெண்களிடம் திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon