மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

முத்தக்காட்சியில் அசத்தும் அனு இம்மானுவேல்

முத்தக்காட்சியில் அசத்தும் அனு இம்மானுவேல்

லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அனு இம்மானுவேல்.

கேரளத்தைச் சேர்ந்தவர் நடிகை அனு இம்மானுவேல். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். இப்போது, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தற்போது அனு, ‘ஆக்ஸிஜன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் கோபிசந்த், ராஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நாயகனுக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார் அனு. இந்த விஷயம் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது. பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா என அடுத்தடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அனு இமானுவேல் ஒப்பந்தமாகிவரும் நிலையில், இனிவரும் படங்களில் கவர்ச்சியாக நடிக்க அவர் முடிவுசெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon