மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 14 டிச 2019

நிலவேம்பு மகிமையை நிரூபித்த மனித நேயர்!

 நிலவேம்பு மகிமையை நிரூபித்த மனித நேயர்!

தமிழகத்தில் எங்கெங்கும் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது. அரசு ஒருபக்கம் மற்றும் கட்சிகள், சமூக அமைப்புகள் ஒருபக்கம் என்று டெங்கு காய்ச்சலை தடுக்க கூடிய வகையில்… நில வேம்பு கஷாயத்தையும், பப்பாளி இலைச் சாறையும் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்… திடீரென, ‘நில வேம்பு கஷாயத்தை மருந்து என்று நம்பிக் குடிக்காதீர்கள். அது ஆண்மைக் குறைவுக்கு வழி வகுக்கும்’ என்று ஒரு சிலர் கொளுத்திப் போட டெங்கு பீதியை விட இதுவே பெரும் பீதியாய் இப்போது தமிழ்நாட்டில் பற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த வாய்ச் சொல் வீரர்களின் வதந்தியை அடக்கும் வகையில் தேவையான அனைத்து நிரூபணங்களையும் செய்து வைத்திருக்கிறார் மனித நேய மேயர் சைதை துரைசாமி.

ஆம்… மனித நேயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது இதுபோன்ற டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. அப்போது மனித நேயரின் செயலாற்றலால் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது டெங்கு.

எப்படி கொசுக்களைக் கட்டுப்படுத்த நொச்சி செடிகளை மனித நேயர் மாநகரம் முழுதும் நட்டாரோ… அதேபோல டெங்குக் காய்ச்சலை ஒடுக்க நில வேம்பு கஷாயத்தையும், பப்பாளி இலைச் சாற்றினையும் கையிலெடுத்தார் மனித நேயர்.

அதை விநியோகித்தது மட்டுமல்ல… எதிர்காலத்தில் இப்படி யாராவது பிரச்னை செய்வார்கள் என்பதை அறிந்தோ என்னவோ, நிலவேம்பு கஷாயமும், பப்பாளி இலைச் சாறுமே டெங்கு காய்ச்சலுக்கு சரியான தீர்வு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தே வைத்திருக்கிறார் மனித நேயர்.

இதுபற்றி தக்க நேரத்தில் அவரே தெரிவித்திருக்கும் இந்த தகவல் மிக முக்கியமானது.

’’2012-ம் ஆண்டில் நான் மேயராக இருந்தபோது, டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று அவர்கள் கூறினார்கள். இதையடுத்து, சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியபோது, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் தான் தீர்வு என்று அவர்கள் கூறினார்கள்.

சராசரியாக மனிதனுக்கு 1½ லட்சம் முதல் 4 லட்சம் வரை ரத்த தட்டணுக்கள் இருக்கவேண்டும். தட்டணுக்கள் குறையும்போது தான் உயிரிழப்பு நேரிடுகிறது. உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் அடையாளமாக சிவப்பு புள்ளிகள் வருவதுதான், இதனுடைய இறுதிக்கட்ட அறிகுறி.

டெங்கு காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டால், ரத்த தட்டணுக்களை கவனித்து பப்பாளி இலைச்சாறு மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுத்தால் காப்பாற்றிவிடலாம். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை செலவு இல்லாமல் பப்பாளி இலைச்சாறு அதிகரிக்கிறது. இதன்மூலம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணம் தவிர்க்கப்படுகிறது.

இந்த மருந்துகளை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிண்டியில் உள்ள ‘கிங்’ பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொடுத்த சான்றிதழுடன், நானும்,சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம்.

இதையடுத்து நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கு வதற்கு ஜெயலலிதா 21-11-12 அன்று அரசாணை பிறப்பித்தார். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவை இலவசமாக வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவாக இருந்தபோது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176. ஆனால் சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்த பின்னர் அந்த எண்ணிக்கை 931 ஆக குறைந்திருக்கிறது.

2012-ம் ஆண்டில் இந்த மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553. மருந்துகள் கொடுத்த பின்னர் அடுத்த 3ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 378 ஆக குறைந்திருக்கிறது. 2015-ம் ஆண்டு பெருமழை வெள்ளம் வந்த சமயத்தில் 12 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 18லட்சம் பேருக்கு அவை வழங்கப்பட்டன.

சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்குரிய நோய் தடுப்பு சக்தி இருக்கிறது என்பதை நான் அனுபவரீதியாக பார்த்தவன்.

அரசு ஆணை பிறப்பித்ததும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு ஆகியவை கொடுக்கப்பட்டன. இது குறித்து அச்சப்பட வேண்டியதும் இல்லை, பக்க விளைவுகளும் இல்லை’ என்கிறார் மனித நேயர்.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து நிலவேம்பும், பப்பாளியும் என்று தமிழகத்துக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி, அதற்கான ஆய்வுகளையும் நடத்த வைத்து நிரூபித்து, இதை அனைவருக்கும் கொடுப்பதற்கான அரசாணையையும் வெளியிட வைத்தவர் தான் மனித நேய மேயர்.

இவரைப் போன்ற சிறந்த நிர்வாகியைப் பெற சென்னை என்ன தவம் செய்ததோ?

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon