மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த மாருதி சுஸுகி!

ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த மாருதி சுஸுகி!

இந்த நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டில் (ஏப்ரல் - செப்டம்பர்) அதிக பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, “2017ஆம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 57,300 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 6 சதவிகிதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 54,008 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் இந்த அரையாண்டில் 44,585 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 63,014 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. இதனால் ஏற்றுமதியில் இந்த ஆண்டு 25 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. வோல்க்ஸ் வாகன் நிறுவனம் முதல் அரையாண்டில் 50,410 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 16.92 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 45,222 வாகனங்களை முதல் அரையாண்டில் ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,613 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. நிசான் மோட்டார்ஸ் நிறுவனம் முதல் அரையாண்டில் ஏற்றுமதியில் 37.11 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிறுவனம் 30,872 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் 49,091 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது