மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

இயக்குநர் பீம்சிங், எத்தனையோ அருமையான பல படங்கள் இயக்கி இருந்தாலும் இன்றுவரை அவர் பெயர் சொன்னதும் நினைவில் நிற்கும் படம் பாசமலர். சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்கள் பலவற்றை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர். சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று ‘பா’ வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றன.

தமிழ்மொழி மட்டுமல்லாது இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் இயக்கியவர். இலக்கியத்தின் மீது ஆர்வம்கொண்ட அவர், ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட பல நாவல்களையும் திரைப்படமாக்கி வெற்றி கண்டவர். இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறனோடு விளங்கிய ஒரு திரைக் கலைஞர்.

சினிமா பல கலைகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்டாலும் சினிமாவுக்காக உருவான கலை படத்தொகுப்பு மட்டுமே. சினிமாவில் பல்வேறு துறைகள் இருந்தாலும் ஒரு படம் உருவாக முதுகெலும்பாக இருப்பது படத்தொகுப்பாகும். படத்தொகுப்பைக் கற்றுக்கொள்வதால் நேரம் விரயமாவது, தேவையில்லாத ஷாட்டுகளைத் தவிர்ப்பது முதலான பல தேவையற்ற விஷயங்களைத் தவிர்க்க முடியும். அதைக் கற்றுக்கொண்டதோடு, தனது பல படங்களுக்கு அவரே படத்தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ள பீம்சிங் கூறியது.

“ஓர் இயக்குநர் என்பவன் படத்தொகுப்பாளராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவனுக்கு சினிமாவின் மொழி இலகுவாகும்.”

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon