மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

ஷாருக் கானின் மனிதநேயச் செயல்பாடு!

ஷாருக் கானின் மனிதநேயச் செயல்பாடு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகையை நேரில் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக் கான்.

2011ஆம் ஆண்டு முதல் கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவரும் அருணா பி.கே. என்பவர் ஷாருக் கானை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவருடைய விருப்பத்தை #SRKmeetsAruna என்ற ஹேஷ்டேகுடன் ஷாருக், அருணாவை சந்திக்க வேண்டும் எனப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவுசெய்தனர்.

அருணாவின் நிலை குறித்து அறிந்த ஷாருக், அவரை நேரில் சந்திக்க வருவதாகக் காணொளிப் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “நோயால் நீங்கள் படும் வேதனை குறித்து உங்கள் மகன் அக்ஷத், மகள் பிரியங்கா வாயிலாகக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். நீங்கள் நலம்பெற வேண்டும் என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். கூடிய விரைவில் நான் உங்களை நேரில் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஷாருக் கான் காணொளி பதிவு

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon