மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 12 நவ 2019

வாட்ஸ்அப் வடிவேலு

வாட்ஸ்அப்  வடிவேலு

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தைப் பத்தி ஏற்கெனவே அவரோட வேலை பாத்தவங்க ‘இது ஓர் ஏடாகூடமான ஸ்கூலு. பார்த்து ட்ரீட் பண்ணுங்க’னு நிறைய சொல்லி இருக்காங்க... அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.

முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...

சரி... எடுத்தவுடனேயே ஏதாவது கேள்வி கேக்க வேண்டாம்னு முதல் பையனை எழுப்பி...

“உன் பேர் சொல்லு.”

“பழனி.”

“உன் அப்பா பேரு?”

“பழனியப்பா.”

அடுத்தப் பையனை எழுப்பி,

“உன் பேர் சொல்லு.”

“மாரி.”

“உன் அப்பா பேரு?”

“மாரியப்பா.”

அவருக்குக் கொஞ்சம் டவுட் வருது... இருந்தும் அடுத்தப் பையனை எழுப்பி...

“உன் பேர் சொல்லு.”

“பிச்சை.”

“உன் அப்பா பேரு?”

“பிச்சையப்பா.”

இப்போ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு... சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு...

அடுத்தப் பையனை எழுப்பினாரு...

“முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...” (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

“ஜான்.”

“இப்ப உன் பேரைச் சொல்லு.”

“ஜான்சன்.”

கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...

அடுத்த பையனை எழுப்பி,

“உன் அப்பா பேரைச் சொல்லு..."

“டேவிட்.”

“உன் பேரு...?”

“டேவிட்சன்”

கொலவெறி ஆயிட்டாரு ஆய்வாளர். கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி...

அடுத்த பையனை எழுப்பி...

“உன் தாத்தா பேரைச் சொல்லு.”

“சார்... அப்பாவோட தாத்தாவா? அம்மாவோட தாத்தாவா?”

ஆய்வாளர் பல்லைக் கடிச்சிக்கிட்டு,

“அப்பாவோட தாத்தா...”ன்னாரு.

“வீரமணி.”

“சரி அப்பா பேரு?”

“வீ.ரமணி.”

“உன் பேரு?”

“வீ.ர.மணி...”

அப்புறம் என்ன? அதுக்கப்பறம் அந்தப் பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லையாம்.

அந்தப் பள்ளிக்கூட விலாசம் இருந்தா யாருக்காச்சும் தெரிஞ்சா அனுப்புங்களேன். பல அறிவுக்குன்றெல்லாம் அங்கதான் உருவாகியிருப்பாங்க போல!

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon