மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!

2018 ஜேஇஇ மெயின் தேர்வு அறிவிப்பு!

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பிஇ, பிடெக் போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ (ஜாயின்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்) பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு தேதியை சிபிஎஸ்சி அக்டோபர் 20 அன்று அறிவித்தது. அதன்படி, 2018 ஏப்ரல் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. எனினும், கணினி வழியிலான தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 2018 ஏப்ரல் மாதம் மத்தியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஇஇ பிரதான தேர்வு 2018 தாள் 1 (பிஇ / பிடெக்) முதல்தாள் தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழியிலான தேர்வு நடத்தப்படும். தாள் 2 (பி.ஆர்ச் / பி.ப்ளான்) கணினி வழியிலான தேர்வு மட்டும் நடத்தப்படும்.

தேர்வுக்கான ஆன்லைன் பதிவு 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து 2018 ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஇஇ பிரதான தேர்வு இந்தியாவில் 104 நகரங்களிலும், 9 வெளிநாட்டு நகரங்களிலும் நடைபெறும்.

இந்தியாவில் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி), 23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐஐடி) மற்றும் 20 அரசு நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள 24,323 இடங்களை நிரப்ப ஜேஇஇ பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 65 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களும் பெற வேண்டும். விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

2016 ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ பிரதான தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon