மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

ஹாக்கி: கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா!

ஹாக்கி: கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே ரமன்தீப் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். மலேசிய அணி கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தது. 29ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெறச் செய்தார். முதல் பாதி முடிவில் மலேசியா 0-2 எனப் பின்தங்கியிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது இந்திய அணி. ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் ஷாஹ்ரில் மலேசியா அணிக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். அதைத்தொடர்ந்து மலேசிய அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பும் வீணானது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

2003 மற்றும் 2007ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 23 அக் 2017