மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!

கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

சாலை விபத்துக்களின்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவரைவிட, பின்னால் இருப்பவரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 100 சி.சிக்கும் குறைவான 25% இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், பின் இருக்கைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 சி.சிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளுக்குத் தடை விதிக்க, கர்நாடக மாநில மோட்டார் வாகனச் சட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், அதை நடைமுறைப் படுத்தப்படவில்லை என கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விதி புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்குத் தான் பொருந்தும். அதன்படி, இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகன ஓட்டிகள் மட்டும் அமரும் வகையிலேயே இருக்கையை அமைக்க வேண்டும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon