மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

ஸ்ரீகாந்த் மூன்றாவது முறையாக சாம்பியன்!

ஸ்ரீகாந்த் மூன்றாவது முறையாக சாம்பியன்!வெற்றிநடை போடும் தமிழகம்

டென்மார்க் ஒப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், கொரியாவைச் சேர்ந்த லீ ஹூனை வீழ்த்தித் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில், சூப்பர் சீரிஸ் பிரிமியர் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நேவால், பி.வி சிந்து ஆகியோர் முந்தைய சுற்றுகளில் தோல்வி அடைந்து வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தொடர்ந்து நம்பிக்கை அளித்து வந்தார். இந்தத் தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-10 என கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் சுற்றிலும் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 21-5 என வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 25 நிமிடங்களே நடைபெற்றது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஒப்பன் மற்றும் இந்தோனேசிய ஒப்பன் பட்டங்களை வென்றிருந்தார். தற்போது வென்றுள்ள டென்மார்க் ஒப்பன் பட்டதையும் சேர்த்து இதுவரை மொத்தம் 5 பட்டங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் ஸ்ரீகாந்த்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon