மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்துள்ளது. அணைகள் நிரம்பியுள்ளன. ஆனால் தமிழகம் மட்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற 26-ந்தேதிக்கு பிறகு தொடங்க உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதி வாரத்தில் நிறைவு பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 26-ந்தேதியில் இருந்து 29-ந்தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தொடங்க தாமதம் ஆனாலும் இந்த ஆண்டு இயல்பான அளவைவிட அதிகமாக மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 44 மி.மீ. மழை பெய்யும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த வட கிழக்கு பருவமழை அதிக அளவில் பொழிய வாய்ப்புள்ளது என்ற தகவலால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon