மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

மெர்சல்: பாலிவுட்டிலும் பா.ஜ.க எதிர்ப்பு!

மெர்சல்: பாலிவுட்டிலும் பா.ஜ.க எதிர்ப்பு!

மெர்சல் விவகாரம் தொடர்பாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ஹா ராவ் சினிமா நடிகர்களுக்குப் பொது அறிவு குறைவு என விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரியை விமர்சிக்கும் வசனங்கள் உள்ளன. இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர். மறுபுறம் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மெர்சல் படத்துக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துவருகின்றனர். இதனால் ‘மெர்சல்’ படம் தேசிய அளவில் பிரபலமாகி ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேரப் பெற்றுவருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ஹா ராவ், “இந்திய திரைப்பட நடிகர்கள் மிகவும் குறைந்த அளவு பொது அறிவைப் பெற்றவர்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்குப் பல தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர்.

இந்தி நடிகரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் நரசிம்ஹா ராவின் பேட்டியை இணைத்து, “இங்குள்ள திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தரம் இருக்கிறது. ஆனால், இவர் உங்களைப் பற்றி எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று பாருங்கள்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon