மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

மதுரை தனியார் மருத்துவமனைக்கு அபராதம்!

மதுரை தனியார் மருத்துவமனைக்கு அபராதம்!

டெங்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, மதுரையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாவட்ட ஆணையர் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை ஓரங்களில் நீர் தேங்கும்படி டயர்கள், பழைய பொருட்கள், குப்பைகளை வீசக் கூடாது. அவ்வாறு, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவின் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை ஆணையர் அனீஷ்சேகர் தலைமையில் பல்வேறு இடங்களில் இன்று (அக்டோபர் 23) காலை முதல் சுகாதார ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தியபோது மருத்துவ கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் அந்தப் பகுதி காணப்பட்டதால் மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார். இதுதவிர நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தபோது மருத்துவர்கள் பணியில் இல்லாததும் தெரியவந்துள்ளது.

இதுபோன்று நேற்று சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon