மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

தேசிய கீதம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!

தேசிய கீதம்: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து!

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்பதன் மூலம்தான் தேசப்பற்றைக் காட்ட வேண்டும் என்பதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் இன்று (அக்டோபர் 23) கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதால், 2016ஆம் ஆண்டு நவம்பர்30 ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்பும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு தேசிய கீதம் இசைக்கப்படும்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். திரையில் தேசியக் கொடியை காட்ட வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்பதற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும்,விரும்பத் தகாத பொருள்களின் அட்டைகளில் தேசிய கீத வரிகள் அச்சிடப்படுவதைத் தடுக்க வேண்டும். தேசிய கீதத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் ஆதாயம் தேடக் கூடாது. இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நாடு முழுவதும் பல வன்முறை சம்பவங்களுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்தது.

அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டாலும் எழுந்து நிற்கவேண்டுமா” என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் முன்பு கடந்த பிப்ரவரி மாதம் வந்தது. அப்போது, நீதிபதிகள், “திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமில்லை எனத் தீர்ப்பளித்தனர்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

திங்கள் 23 அக் 2017