மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 12 நவ 2019

ஆக்ஷன் காமெடியில் அதர்வா

ஆக்ஷன் காமெடியில் அதர்வா

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திற்கு பிறகு இமைக்கா நொடிகள், செம்ம போத ஆகாத உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் அதர்வா. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள `ஒரு ஜீவன் அழைத்தது' படத்தில் நடிக்கவிருக்கும் அவர், தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இவன் தந்திரன் படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் இணைந்திருக்கும் இயக்குநர் கண்ணன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார். "படத்தை அடுத்த வருடம் தொடங்க இருக்கிறோம். இந்தப் படத்தில் காமெடியும் ஆக்ஷனும் சம அளவில் இருக்கும். லட்சிய எண்ணம் கொண்ட இளைஞன் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களை எப்படி அணுகுகிறான் என்ற கேரக்டரில் அதர்வா நடிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கான நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. டார்லிங் 2 , அர்ஜுன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ராதன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு குறித்து தெரிவித்த கண்ணன், "இவன் தந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னா இதிலும் பணிபுரிகிறார். நிறைய நேரங்களைச் செலவிட்டு ஸ்கிரிப்டை நன்றாக மெருகேற்றி உள்ளேன். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருநெல்வேலியிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக சென்னையிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon