மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பாகுபலி: நாசர் எடுத்த பாடம்!

பாகுபலி: நாசர் எடுத்த பாடம்!

பாகுபலி படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்றை நடிகர் நாசர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிப்புக் கலை குறித்து இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது நடிகர் நாசர் பின்வரும் சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் நாசர் என முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின்போது நடிகர்களிடம் இருந்து தான் நினைத்த நடிப்பை பெறமுடியாமல் தவித்துள்ளார் இயக்குநர் ராஜ மௌலி. எதனால் இது நடைபெறாமல் உள்ளது எனக் குழப்பத்தில் இருந்த போது நாசர் நடப்பதை கவனத்துக்கொண்டிருந்தார். அப்போது நாசர் ஒவ்வொருவரின் வசனங்களையும் வாங்கி காட்சியில் பங்குகொள்ளும் மற்ற நடிகர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார். நடிகர்கள் தன்னுடைய கதாபாத்திரத்தின் வசனத்தை அல்லாமல் வேறு ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தை மனப்பாடம் செய்து நடித்துள்ளனர். அப்படி நடித்ததால் மற்ற நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

இது பற்றி நாசர் கூறும் போது, “வசனங்களை விட எது நமக்கு ஊக்கமளிக்கிறதோ அதுவே முக்கியம். ஏன் நாம் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்? ஸ்கிரிப்டில் என்ன எழுதியிருந்தாலும் நடிகர்கள் துணை பிரதியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அதன் பின் அவர் நடிகர்களை ஜிப்ரிஷ் மொழி என்று கூறப்படும் வசனங்கள் மூலம் அல்லாமல் புரியாத ஒலிகளைக் கொண்டு ஏற்ற இறக்கத்துடன் உடல்மொழியாலும் முக பாவத்தாலும் உடன் நடிப்பவர்களுக்கு புரியும் விதத்தில் நடிக்க கூறியுள்ளார். “இதன் மூலம் நடிகர்களின் மூளை துல்லியமாக செயல்படுவதுடன் சரியான உணர்ச்சிகளை சரியான தருணத்தில் வெளிப்படுத்த முடியும். அப்போது நடிகர்கள் வசனத்தை விட சரியாக உணர்ச்சிகள வெளிப்படுத்துவதுதான் சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon