மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 2 ஜூலை 2020

பணி நிரந்தரம்: செவிலியர்கள் போராட்டம் அறிவிப்பு !

பணி நிரந்தரம்: செவிலியர்கள் போராட்டம் அறிவிப்பு  !

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் , தங்களை

பணி நிரந்தரம் செய்யக்கோரி நவம்பர் 1 ஆம் தேதி முதல் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னையில், தமிழ்நாடு மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் கூறியுள்ளதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு நர்சிங் கோர்ஸ் முடித்தவர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது முதன் முறையாகச் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 11 ஆயிரம் செவிலியர்களுக்கு, 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. 7 முதல் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் அரசு சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, இடமாற்றக் கலந்தாய்வு மூலம், அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ள இச்சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அக் 31 வரை அரசுக்கு அவகாசம் கொடுக்கவுள்ளோம். அதற்குள் அரசு தரப்பில் தங்களது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லவுள்ளோம். அப்போதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 வினாடிகளில் செல் கவுன்ட்டர் மூலம் ரத்தப்பரிசோதனை செய்யப்படும் என அரசுதரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு போதிய லேப் டெக்னீசியன்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon