மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

பன்னீருக்கு எதிராக திமுக மீண்டும் வழக்கு!

பன்னீருக்கு எதிராக திமுக மீண்டும் வழக்கு!

கடந்த பிப்ரவரி மாதம் அரசுக்கு எதிராக வாக்களித்த, பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அணிகள் இணைந்த பிறகு, துணை முதல்வராக பன்னீர்செல்வமும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ததுபோல, முன்னர் அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.,பிச்சாண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். மனுவில்,"கடந்த பிப்ரவரி மாதம் கொறடா உத்தரவுக்கு மாறாக அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம், பாண்டியராஜன் இருவரையும் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனவும், அரசின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி அரசின் அங்கமாக செயல்பட முடியும் என்றும், எனவே இருவரையும் அமைச்சர்களாக செயல்பட தடைவிதிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார். வழக்கில் எதிர்மனுதாரர்களாக தமிழக ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 23 அக் 2017