மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் `OPPO F 5'!

புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் `OPPO F 5'!

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, புதிய தொழில்நுட்பம் கொண்ட தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது. அந்த வரிசையில் வரும் நவம்பர் முதல் ஒப்போ-எப் 5 என்ற புதிய மாடல் அறிமுகமாகவுள்ளது.

செல்ஃபிக்குப் பெயர் போன ஒப்போ நிறுவனத்தின் இந்த ஒப்போ-எப்5, இதுவரை வந்த மாடல்களைக் காட்டிலும் செல்ஃபியில் சிறந்து விளங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஒப்போ-எப்5, 18:9 ஸ்க்ரீன் தரத்தில் வெளியாகும் முதல் போன் ஆகும். 6 இஞ்ச் ஸ்க்ரீன் கொண்ட இந்த போன், ஃபுல் எச்.டி. டிஸ்ப்ளே தரத்துடன் பெஸல்-லெஸ் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ரிஸல்யூசன் 2160x1080 என்ற தரத்தில் இருக்கும். 18:9 ஸ்க்ரீன் தரத்தில் வெளியாவதால் இந்தப் போனில் கேம்ஸ், வெப் பிரவுசிங், ரீடிங், வீடியோ போன்ற சேவைகள் அதிக தரத்துடன் இருக்கும். ஒப்போ நிறுவனம் முற்றிலும் புதிய செஃல்பி தொழில்நுட்பத்துடன் இந்த `ஒப்போ-எப்5' போனை வடிவமைத்துள்ளது.

ஒப்போ எப்5 ஸ்மார்ட்போன், செஃல்பி வரலாற்றில் முதல் முறையாக ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடுக்கப்படும் செஃல்பி படங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக இருக்கும். மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை எடிட் செய்யாமலேயே சிறந்த அவுட்புட்டைப் பெற முடியும்.

ஒப்போ-எப் 5, 4GB மற்றும் 6GB RAM வசதியுடன் குவால்காம் ஸ்நாப்டிராகன் ப்ராஸசருடன் வெளிவருகிறது. இது 64GB Internal மெமரி கொண்டதாகவும், 128GB External மெமரி கொண்டதாகவும் உள்ளது. ஆன்ட்ராய்ட் 7 நக்கட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இதன் பேட்டரி திறன் 4000mAh கொண்டதாக இருக்கும்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon