மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

நான் ஒரு தொகுதிக்கு மட்டும் அமைச்சரல்ல!

நான் ஒரு தொகுதிக்கு மட்டும் அமைச்சரல்ல!வெற்றிநடை போடும் தமிழகம்

நான் ஒரு தொகுதிக்கு மட்டும் அமைச்சர் அல்ல. மொத்த மாநிலத்துக்கும்தான் அமைச்சர் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேட்டில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதைப் பற்றி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சர். ஆனால், அதை அவர் மறந்து 'சூப்பர் முதலமைச்சராக' செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மீன் வளத்தைப் பற்றியும் அதைச் சார்ந்த மக்களைப் பற்றியும் சிந்திக்க அவருக்கு நேரமில்லை. எனவேதான், இன்று காசிமேட்டில் மீனவ மக்கள் ஜெயக்குமாருக்கு எதிராகப் போராடினர்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

இன்று (அக்டோபர் 23) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அமைச்சர் என்றால் மாநிலம் முழுவதுக்கும்தான், ஒரு தொகுதிக்கு மட்டுமல்ல” என்று ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார். “இரட்டை இலைச் சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும். தினகரன் அணியினர் போலி ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வர வாய்ப்பில்லை. தமிழக அரசைக் கவிழ்க்க திமுகவுடன் சேர்ந்து டி.டி.வி.தினகரன் கூட்டுச்சதி செய்து வருகிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon