மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது!

மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்தது!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 23) மேற்கூரை இடிந்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இன்று அதிகாலை திடீரென மகப்பேறு பிரிவின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது பெண்கள், குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர்.

பாதுகாப்பற்ற நிலையிலும், பராமரிப்பின்றியும் பல மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. நோயாளிகளுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருகின்றன.

2016, செப்டம்பர் மாதம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைப் பிரிவின் மேற்கூரை மின்விசிறி விழுந்ததில் இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், காரைக்குடியைச் சேர்ந்த மகாலட்சுமி (7) என்னும் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அண்மையில் நாகை பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகக் கட்டிடம் கடந்த 20ஆம் தேதி காலை இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவங்கள் அரசுக் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon