மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

235 கோடி அபராதம்: பாரத ஸ்டேட் வங்கி

235 கோடி அபராதம்: பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வைப்புத் தொகையைப் பராமரிக்க தவறிய காரணத்திற்காக அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை 235.06 கோடி என அந்த வங்கி தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, தன்னிடத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. பெருநகரங்களில் வாழ்பவர்கள் 5000 ரூபாய், நகரங்களில் வாழ்பவர்கள் 3000 ரூபாயும், சிறு நகர்களில் வசிப்போர் 2000 ரூபா, கிராமப்புறங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்பு இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என நிபந்தனை விதித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கண்டனக் குரல் எழுப்பினர். ஆனால் ஸ்டேட் வங்கி தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு காலத்தில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்துத் தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு மும்பை வங்கிகள் இயக்கத் துறையின் துணைப் பொது மேலாளர் பதிலளித்துள்ளார். மொத்தமுள்ள 388.74 லட்சம் வாடிக்கையாளர்களில் நாங்கள் நிர்ணயித்த குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்காதவர்களிடமிருந்து ரூ.235.06 கோடி அபராதமாக வசூலித்துள்ளோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon