மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 அக் 2017

ஜி.எஸ்.டி.: வரி விகிதங்கள் மறுபரிசீலனை!

ஜி.எஸ்.டி.: வரி விகிதங்கள் மறுபரிசீலனை!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சுமையைக் குறைக்கும் வகையில் ஜி.எஸ்.டி.யில் வரி விகிதங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு நான்கு விகிதங்களில் வரிகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்தச் சீர்திருத்த நடவடிக்கை பெருமளவில் வரவேற்கப்பட்டாலும், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை உள்ளிட்ட துறைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாகவும், அவை குறைக்கப்பட வேண்டும் என்றும் இத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் ஆராயப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் அக்டோபர் 22ஆம் தேதி பேசிய ஹஸ்முக் அதியா மேலும் கூறுகையில், “சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலை இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். முன்னதாக 2005ஆம் ஆண்டில் புதிதாக மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்பட்ட போதும் இதே நிலைதான் இருந்தது. அப்போது மக்கள் அதை எதிர்த்து சாலைகளில் போராட்டம் செய்தனர். அதை விடக் குறைவான எதிர்ப்பே இந்த ஜி.எஸ்.டி.க்கு எதிராக தற்போது உள்ளது. எனவே இயல்பு நிலை விரைவில் திரும்பிவிடும்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 23 அக் 2017