மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

அதிர்ச்சி கொடுத்த த்ரிஷா!

அதிர்ச்சி கொடுத்த த்ரிஷா!

விக்ரம் - ஹரி கூட்டணியில் வெளியாகி வெற்றி படமாக அமைந்த ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி 2’ என்ற பெயரில் உருவாகி வந்தது. பின்னர் அதன் தலைப்பை ‘சாமி ஸ்கொயர்’ என மாற்றினர். சாமி படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். த்ரிஷாவைவிட கீர்த்தி அதிக நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாலும், திரைக்கதையில் இருவருக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் படக் குழு தெரிவித்திருந்தது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும் ஏற்காட்டிலும் தொடங்கியது. விக்ரமுடன் இணைந்து கீர்த்தி பங்குபெறும் ஹெலிகாப்டர் காட்சி பெரிதாகப் பேசப்பட்டது. கீர்த்தியின் பாத்திரம் கனமானது என்றும், இரண்டாம் பகுதியில் ப்ளாஷ்பேக் நாயகியாக மட்டுமே த்ரிஷா தோன்றுகிறார் என்றும் தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக ‘சாமி 2’வில் இருந்து நான் விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். படக் குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon