மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

குர்மீத் வளர்ப்பு மகளுக்குக் காவல் நீட்டிப்பு!

குர்மீத் வளர்ப்பு மகளுக்குக் காவல் நீட்டிப்பு!

குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் இன்சானுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஹரியானா மாநில காவல்துறையினர் 43 பேர்மீது வழக்குப் பதிவுசெய்து தேடிவந்தனர். இவர்களில் முதலிடத்தில் இருந்த ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானைக் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஆறு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவரது நீதிமன்றக் காவல் நேற்று (அக் 23) வரை நீட்டிக்கப்பட்டது.

அந்தக் காவலும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று நீதிபதி ரோஹித் வாட்ஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹனிபிரீத் மற்றும் அவருடன் கைதான சுக்தீப் கவுரும் அம்பாலா சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon