மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

மெர்சல்: மருத்துவர்களுக்கு சீனு ராமசாமி கேள்வி!

மெர்சல்: மருத்துவர்களுக்கு சீனு ராமசாமி கேள்வி!

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில் மருத்துவத்துறை குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவச் சங்க செயலர் என்.கார்த்திகேயன் சனிக்கிழமையன்று (அக்டோபர் 21) நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மெர்சல் திரைப்படத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பற்றி தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது. அப்படி இருக்கும்போது மருத்துவத் துறையில் ஊழல் என்று விஜய் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே படத்தில் குறிப்பிட்ட வசனத்தை நீக்க சொல்லி படக்குழுவினருக்கும், தணிக்கை வாரியத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். குறிப்பிட்ட காட்சியை நீக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

மருத்துவர்களின் இத்தகைய கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும்விதமாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 23) மாலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மெர்சல் விமர்சனத்தால் வருந்தும் அரசு மருத்துவக்கழகத்தார் தர்மதுரையில் மேன்மையைச் சொன்னதற்கு வாழ்த்து அறிக்கைகூட தராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon