மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

நிகரி விருது!

நிகரி விருது!

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவரும், பள்ளி ஆசிரியர் ஒருவரும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘நிகரி’ என்னும் விருதளித்துக் கவுரவிக்கப்படுகின்றனர்.

2017ஆம் ஆண்டுக்கான நிகரி விருது நவம்பர் 5ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அறவேந்தனும் ஆசிரியர் மு.இளங்கோவன் கண்ணனும் இந்த விருதினைப் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் அறவேந்தன் குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இதற்கு முன்பு அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்தவர்.

ஆசிரியர் மு.இளங்கோவன் கண்ணன் இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார். கிராமிய அறிவியல் விழாக்கள் நடத்துதல், மாணவர்களுக்குக் கலை, இலக்கிய பயிற்சிகளை அளித்தல் போன்ற செயல்களைச் செய்துவருகிறார்.

2016ஆம் ஆண்டுக்கான நிகரி விருதைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சா.உதயசூரியனும் பாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் நா.சாந்தியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon