மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

வாட்ஸ்அப் வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

“மெர்சல்..

ஆங்.. மெர்சல்..

ஆஹா மெர்சல்..

ஊஹூ மெர்சல்..

அட்டக்காபிப்பா மெர்சல்..

அட்டகாசம்ப்பா மெர்சல்..

அவங்களுக்குப் பொறாமை போலிருக்கு மெர்சல்…

அரசியல் மெர்சல்..”

மெர்சல் பத்தி நாமளும் எதையாச்சும் பேசி வைப்போம். இல்லன்னா நம்மள ஏதோ ஒதுக்கப்பட்ட, அருவருப்பான நபர்கள் மாதிரியே பாக்குறாங்க. என்னடா வடிவேலு உனக்கு வந்த சோதனை?

எந்தப் பக்கம் போனாலும் அங்கங்க கேட்டுப்போட்டு அங்கங்க மெர்சல் பத்தி பேச வெச்சி, “யார் சார் அந்த மெர்சல்.. எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே”ங்கிற ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டாங்க.

கொஞ்சம் புதுமையான தமிழகமாத்தான் இருக்கு.

இவ்ளோ நாள் பிக் பாஸ், ஓவியா, அனிதா மரணம், விவசாயிகள் போராட்டம்னு பேசிகிட்டிருந்த நமக்கு, அடுத்ததா மெர்சல்.. எப்படியோ மக்கள யோசிக்க விட்டுடாம பரபரப்பாவே வெச்சிகிட்டு சிறப்பா செயல்படுது தமிழகம். தீபாவளி சமயத்துல அப்படி ஒரு பரபரப்பான வாட்ஸ்அப் மெசேஜ்கூட வந்துச்சு.

வடபழனியில், கூட்டம் இல்லாத ஒரு துணிக்கடை. திடுதிடுவென ஒரு பெண் உள்ளே நுழைந்தார்.

“ஏங்க, வன்னியர் குழந்தைக்கு டிரஸ் கிடைக்குமா?”

“இருக்கும்மா.. அந்த செக்ஷனுக்குப் போங்க.”

பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்.

“சார், அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒண்ணும் பதறாதீங்க.”

இது சாதி பிரச்னையோன்னு பார்த்தேன்.

நல்லவேளை இது மொழி பிரச்னை.

24 மணி நேரமும் நம்ம பதற்றத்துலயே வெச்சுருக்கானுங்க.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon