மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

மறைந்துவரும் நீர்நிலைகள்!

மறைந்துவரும் நீர்நிலைகள்!

மிக விரைவான நகரமயமாக்கல் காரணமாக கடந்த 42 ஆண்டுகளில், 40 சதவிகிதம் நீர்நிலைகள் டெல்லியில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டெல்லி ஐ.ஐ.டியின் வளிமண்டல அறிவியல் மையம் நடத்திய ஆய்வில், நகரமயமாக்கல் காரணமாக நிலத்தின் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரியும், காற்றின் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரியும் அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த 42 ஆண்டுகளில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை வெப்பநிலையின் அளவு வெகுவாக அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

1972, 1981, 1993, 2003 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நிலங்களின் செயற்கைக்கோள் வரைபடங்களைப் பயன்படுத்தி, நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நகரமயமாக்கலுக்காக வனப்பகுதிகள் சிலவும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த 42 ஆண்டுகளில் டெல்லியில் பசுமை பகுதிகளின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது.

1972ஆம் ஆண்டு 240 சதுர கிலோமீட்டராக இருந்த வனப்பகுதி 2014ஆம் ஆண்டு 160 சதுர கிலோமீட்டராக சுருங்கி உள்ளது. அதாவது 33 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த மரங்கள் இருந்த பகுதிகளில் சிறு தாவரங்கள், புதர் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர வெப்பநிலையும் சில பகுதிகளில் 1.5 டிகிரி வரை அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon