மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 29 நவ 2020

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

ஹாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான க்வென்டின் டாரண்டினோ மாறுபட்ட திரைக்கதை அமைப்பதிலும் வன்முறையை அழகியலோடு காட்சிப்படுத்துவதிலும் சிறந்து விளங்குபவர். இவரது Pulp Fiction, Django Unchained, Inglourious Basterds போன்ற படங்கள் உலகளவில் பிரபலமானவை. திரைப்படத் தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் ஹாலிவுட்டிலிருந்து வந்த இவரது பின்வரும் கூற்று ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது.

“டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது வெறுமனே பெரிய திரைகளில் தொலைக்காட்சியைக் காண்பதுதானே தவிர, வேறொன்றுமில்லை. திரைப்படம் என்பது ஃபிலிம்மால்தான் அதன் முழுப் பிரமாண்டத்தையும் பெறுகிறது. நான் படங்களை எடுக்க முடிவு செய்தது டிஜிட்டலில் அல்ல. டிஜிட்டலில்தான் படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஒரு இண்டஸ்ட்ரி எனக்குத் தேவையும் இல்லை. என் படங்கள் எப்பொழுதுமே ஃபிலிம்மில்தான் எடுக்கப்படும்.”

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon