மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 அக் 2017

வில்லன் : ரிலீஸுக்கு ரெடி!

வில்லன் : ரிலீஸுக்கு ரெடி!

துப்பறிவாளன் படத்திற்குப் பிறகு மோகன் லாலுடன் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்துவருகிறார் விஷால். இந்த படமும் துப்பறியும் கதையாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இப்படத்தை பி.உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். முன்னாள் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஹன்சிகா மோத்வானி, ராஷிகண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், மேரி லேன்ட் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon