மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

கந்துவட்டி பலி: தலைவர்கள் ஆறுதல்!

கந்துவட்டி பலி: தலைவர்கள் ஆறுதல்!

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த தொழிலாளியின் குடும்பத்துக்கு வைகோ மற்றும் திருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு மேலாக பணத்தை திரும்பிச் செலுத்தியபோதும் கடன் வழங்கிய நபர் தொடர்ந்து பணம் கேட்டு அவரை மிரட்டி வந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று (அக்.23 ) திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்குத் தனது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சாருண்யா மற்றும் அட்சய பரணியா ஆகியோருடன் வந்த இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்தார். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். இதில்,சுப்புலட்சமி மற்றும அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் நேற்று இரவு சந்தித்தனர். பின்னர் அவரது சகோதரர் கோபியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதே போல் எம்.எல்.ஏ.கள் மைதீன்கான், லட்சுமணன், அபுபக்கர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இசக்கிமுத்துவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon