மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 அக் 2017

`நான் மகான் அல்ல' இரண்டாம் பாகமா?

`நான் மகான் அல்ல' இரண்டாம் பாகமா?

சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு தனது ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கி வரும் சுசீந்திரன், மாவீரன் கிட்டு படத்திற்குப் பிறகு நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் களமிறங்கியிருக்கிறார். டீசரிலே புதுமை காட்டிய சுசீந்திரன் ட்ரெய்லரை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் நான் மகான் அல்ல படத்தை கண்முன் நிறுத்துகின்றன. குறிப்பாக சண்டைக் காட்சிகள் அந்தப் படம் போல இருக்கும் என யூகிக்க முடிகிறது. அப்படத்தில் நடித்த பெரும்பாலானோர் இதிலும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தை கோலிவுட்டில் ‘அன்னை ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்’ நிறுவனங்களும், டோலிவுட்டில் ‘லக்ஷ்மி நரசிம்ஹா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனமும் தயாரித்துள்ளது. டி.இமான் இசையில் வெளியான பாடல்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ட்ரெய்லரும் படத்திற்கான ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

நயன்தாராவின் அறம், கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித் ஆகிய படங்கள் வெளியாகும் நவம்பர் 10 ம் தேதி சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படமும் வெளிவர உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரெய்லர்

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon