மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

பஜாஜை வீழ்த்திய ஹோண்டா!

பஜாஜை வீழ்த்திய ஹோண்டா!

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக ஹோண்டா நிறுவனம் பஜாஜை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய இருசக்கர வாகன விற்பனை குறித்த விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ளது. அதில், ’ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் (HMSI) 19.8 சதவிகித உயர்வுடன் மொத்தம் 10,48,143 இருசக்கர வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. அதேநேரம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 10,10,559 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10.45 சதவிகித சரிவாகும்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஹோண்டா நிறுவனம் 8,79,852 இருசக்கர வாகனங்களையும், பஜாஜ் நிறுவனம் 11,28,425 இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனச் சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டில் 30,34,504 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டில் இந்நிறுவனம் 10.2 சதவிகித உயர்வுடன் 33,44,292 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

பிற நிறுவனங்களான டி.வி.எஸ். 5,66,362 வாகனங்களையும், ராயல் என்ஃபீல்டு 3,78,304 வாகனங்களையும், யமஹா 2,26,249 வாகனங்களையும், சுசுகி 2,02,771 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon