மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

சித்தா: நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

சித்தா: நாளை இரண்டாம் கட்ட கலந்தாய்வு!

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (அக்டோபர் 25) தொடங்குகிறது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 1,216 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. அதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. அதில் சுமார் 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ். ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி தேதி வரை நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், 390 இடங்களும் தனியார் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 295 இடங்களும் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில், நாளை தொடங்கி அக்டோபர் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தர வரிசைப் பட்டியலில் 3,526 முதல் 5,633 இடங்கள் பெற்றவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon