மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

சுதந்திரத்தைப் புதைக்க நினைத்தால்: பிக் பாஸ் சுஜா

சுதந்திரத்தைப் புதைக்க நினைத்தால்: பிக் பாஸ் சுஜா

கிடாரி, குற்றம் 23, பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் நடிகை சுஜா வருணீ. பிக் பாஸில் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் வொயில்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சுஜா, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். சமீபத்தில் மெர்சல் படம் பார்த்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் `சுதந்திரத்தைப் புதைக்க முடியாது' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தது, அப்படத்திற்கான விளம்பரத்தை அவர்களே ஏற்படுத்தித் தந்ததுபோல் ஆனது. இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்பும் நடிகர் விஜய்க்கும் படக் குழுவுக்கும் ஆதரவும் பெருகிவருகின்றன.

இந்நிலையில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக சுஜா, "மருத்துவமனைகளில் நடக்கும் கேவலமான செயல்களால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டிருப்போம். அந்த வலியைத் தைரியமாக அட்லியும், நம்முடைய தளபதியும் சொல்லியிருக்கிறார்கள். சுதந்திரத்தைப் புதைக்க முடியாது. அடக்க நினைத்தால் பெருகிவிடும். மெர்சல் படத்தை விரும்புகிறேன். ஒரு கலைஞனை, மக்கள் சுதந்திரத்தை, புதைக்க முடியாது. அடக்க நினைத்தால் மக்கள் அப்போது மில்லியனாகப் பெருகிவிடுவார்கள். தமிழன் என்று எந்நாளும் சொன்னாலே திமிரேறும். தமிழ்ப் பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon