மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

இலவசப் பயணம்: போலீசுக்கு ரயில்வே எச்சரிக்கை!

இலவசப் பயணம்: போலீசுக்கு ரயில்வே எச்சரிக்கை!

ரயில்களில் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில் வண்டிகளில் போலீசார் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்துள்ளதையடுத்து போலீசாருக்குத் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

“விரைவு மற்றும் மின்சார ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் போலீசார் பயணம் செய்வதாக அதிக அளவில் புகார் வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. காவல் துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என இது பற்றி, தெற்கு ரயில்வே இன்று (அக். 24) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம், இது குறித்துச் சென்னை காவல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon