மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

வீழ்ச்சியடைந்த வேலைவாய்ப்புகள்!

வீழ்ச்சியடைந்த வேலைவாய்ப்புகள்!

கடந்த 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு விகிதம் 26 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில், மும்பை பங்குச் சந்தையில், பி.எஸ்.இ. 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 241 நிறுவனங்களில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தோரின் எண்ணிக்கை 80,000 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,08,000 ஆக இருந்தது. அதேபோல இந்த 241 நிறுவனங்களில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 31.9 லட்சத்திலிருந்து 32.5 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளதாக பிசினஸ் ஸ்டேன்டர்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய நிறுவனங்களாக டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

மொத்தமுள்ள 241 நிறுவனங்களில் 136 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட அதிகப்பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இதில், 32 நிறுவனங்கள் 10 சதவிகிதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. அதிகபட்சமாக டி.சி.எஸ். நிறுவனம் 33,000 பேருக்கு வேலைவாய்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 3,87,000 ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து டெக் மஹிந்திரா நிறுவனம் 12,500 பேருக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 9,000 பேருக்கும், ஆக்சிஸ் வங்கி 7,000 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. மறுபுறம், விப்ரோ, பெல், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கலில் சரிவைச் சந்தித்துள்ளன.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon