மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

உருளைக்கிழங்கு விலையில் முன்னேற்றம்!

உருளைக்கிழங்கு விலையில் முன்னேற்றம்!

மேற்கு வங்கத்தில் பருவநிலைக்குப் பிறகும் கடந்த இரு தினங்களாக மழை பொழிந்து வருவதால் அங்கு உருளைக்கிழங்கு விற்பனை சிறப்படைந்து வருகிறது. உருளைக்கிழங்கு சாகுபடி பருவத்தில் 15 முதல் 20 நாட்கள் வரை தாமதமாகி மழை பொழிவதால், பழைய சரக்குகளின் விலை அதிகரிக்கும் என்று வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி சிறப்பாக இருந்தது. இந்தியாவில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தின் உருளைக்கிழங்கு உற்பத்தி 22 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 110 லட்சம் டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகியது. இதனால் உருளைக்கிழங்கின் விலை கடுமையாக சரியத் தொடங்கியது.

உருளையின் விலையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றே வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் டன் உருளைக்கிழங்கு குளிர் பதன ஆலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க குளிர் பதன ஆலைகள் சங்கத்தின் தலைவர் பதித் பபன் ‘பிசினஸ் லைன்’ பத்திரிகையிடம் பேசுகையில், “டிசம்பர் வரை தேவையான இருப்பு எங்களிடம் இருப்பதால், விலை அதிகரிக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. அசாம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு அனுப்பப்படுவதால், விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

பிப்ரவரி - மார்ச் காலகட்டத்தில் உருளையின் விலை குவிண்டாலுக்கு 300 முதல் 350 ரூபாயாகக் குறைந்தது. தற்போது ஒரு குவிண்டால் உருளைக்கிழங்கின் விலை 600 முதல் 650 ரூபாயாக உள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon