மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

கோவை: மேம்படும் சரக்கு விமானப் போக்குவரத்து!

கோவை: மேம்படும் சரக்கு விமானப் போக்குவரத்து!

கோவை பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்த சரக்குப் பொருட்கள் கையாளுதலைத் தானியங்கி மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதியன்று மாலை கோயம்புத்தூரில் இந்தியத் தொழில் கூட்டமைப்பால் ‘சரக்கு விமானப் போக்குவரத்துத் தொழில் மேம்பாடு’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சரக்குப் போக்குவரத்து பிரிவின் தலைமை அதிகாரி கெகு கஸ்டெர் கலந்துகொண்டு பேசினார். கோவை பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சரக்குப் பொருட்களைக் கையாள தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த இந்திய விமான நிலைய ஆணையமும் அதன் சரக்குப் போக்குவரத்துப் பிரிவும் இணைந்து பணியாற்றும் என்று கெகு கஸ்டெர் பேசினார்.

புதிய தொழில்கள், புதிய தயாரிப்புகள், புதுப்புது வழிகளில் சரக்கு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தக் கவனம் செலுத்தப்படும் என்று அவர் பேசினார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “இப்பகுதியில் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவை ஆண்டுக்கு 15 முதல் 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது. சரக்குப் பொருட்களை தானியங்கி இயந்திரங்கள் மூலம் கையாளுவதால் இச்சேவை மேலும் வளர்ச்சியடையும். இதனால் வரும் மாதங்களில் சரக்கு விமானங்களின் வரத்து கோவை விமான நிலையத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறினார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon