மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

மீண்டும் இணையும் அபிஷேக் – ஐஸ்வர்யா?

மீண்டும் இணையும் அபிஷேக் – ஐஸ்வர்யா?

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடி ராஜீவ் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1973ஆம் ஆண்டு

ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் சேர்ந்து நடித்த படம் ‘அபிமான்’. பாடகர்களான கணவன், மனைவி இருவரின் வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. இந்நிலையில், படம் வெளியாகி சுமார் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் படத்தை மீண்டும் இந்தக் காலத்துக்கு ஏற்றார்போல் மாற்றி பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபிமான் படத்தில் நிஜ வாழ்வில் கணவன், மனைவியான அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் நடித்திருந்த நிலையில் அதன் ரீமேக் படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து டெக்கான் கிரோனிக்கல் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அவர்களுக்கு நெருக்கமானவர்கள், “நல்ல கதையம்சம் உள்ள படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அபிஷேக், ஐஸ்வர்யா இருவருமே நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். கடைசியாக, மணி ரத்னம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ராவணன் படத்தில் ஒன்றாகச் சேர்ந்து நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பதற்கும், அவர்களின் காதல் மற்றும் நேசத்தை வெளிக்காட்டவும் அபிமான் ஒரு சிறந்த படம்” என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon