மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

கலைஞர்களுக்கு சிவகுமார் அட்வைஸ்!

கலைஞர்களுக்கு சிவகுமார் அட்வைஸ்!

புகை, மது, மாது ஆகியவற்றுக்கு அடிமையாகாதீர்கள் கலைஞர்களே என்று திரையுலகினருக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகர் சிவகுமார்.

பிரபல பாடலாசியரும், இயக்குநரும், பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய நூல் தொகுப்பின் வெளியீடு நிகழ்வு அக்டோபர் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. அப்போது நூலை வெளியிட்டு பேசிய சிவகுமார், “10 ஆண்டுகள் போராடித்தான் எம்.ஜி.ஆர் ராஜகுமாரியில் நடித்தார். குட்டிகரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர் மேலே வந்தார். கையில் 10 ருபாய் இருந்தபோது, 7 ரூபாய் செலவு செய்து மீதி 3 ரூபாயை தானம் அளித்தவர் அவர். எப்போது உன் கையில் 100 ரூபாய் இருக்கும்போது 10 ரூபாய் தானம் செய்ய மாட்டாயோ அப்போது 1000 வைத்திருந்தாலும் 100 ரூபாய் தானம் செய்ய மாட்டாய். அப்படி இருக்க கோடிக்கணக்கான பணம் வைத்திருக்கும் நடிகர் நடிகைகள் எப்படி தானம் செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்..

தொடர்ந்து பேசியபோது, "ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகராக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவன், இயக்குநர் என யாராக இருந்தாலும் அவனுக்கு புகை, மது, மாது என்ற மூன்று சாபத்தை கொடுத்துவிடுகிறான் கடவுள். இதை உலகளவில் சொல்லுவேன். மறைந்த கலைஞர்கள் பலருக்கும் மது, புகை, மாது என இந்த மூன்று பழக்கங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் நலம் முக்கியம் கலைஞர்களே புகை ,மது,மாது ஆகிய மூன்று பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இருங்கள்” என்று அறிவுரை கூறினார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon