மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

திரைப்படமாகும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை!

திரைப்படமாகும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் முதல்வரும், திரைத்துறையில் மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்டவருமான எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் காலங்களில் நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காமராஜர் தி கிங் மேக்கர், முதல்வர் மகாத்மா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளது. இதை வெளியிட்ட பாலகிருஷணன் இயக்க உள்ளார்.

இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில்,"திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படவுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தத் திரைப்படம் அமையும்.

இதற்கான படப்பிடிப்பு வரும் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைக்கிறார். திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக இருவர் நடிக்கின்றனர். நாடக காலகட்ட வாழக்கையில் ஒருவரும், சினிமா, அரசியல் வாழ்க்கையில் ஒருவரும் நடிக்கவுள்ளனர். எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ஆம் தேதி டீசர் வெளியிடப்படும்"என்றனர்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon