மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 26 ஜன 2020

மேம்பாலங்களைச் சீரமைக்க சச்சின் நிதியுதவி!

மேம்பாலங்களைச் சீரமைக்க சச்சின் நிதியுதவி!

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரும் ராஜ்ய சபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தனது MPLADS (நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் மும்பையிலுள்ள நடைமேடை மேம்பாலங்களைச் சீரமைக்க ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோன் சாலை அருகிலுள்ள நடை மேம்பால விபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மும்பை ரயில் நிலைய நடைமேம்பாலங்களைச் சீரமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு சச்சின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பான குடிமகன் என்ற முறையில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதிருக்கவும், நடைமேம்பாலங்களைச் சீரமைக்கவும், எம்.பி. நிதியிலிருந்து வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்குத் தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு எம்.பி.க்கும் தத்தமது பகுதிகளை மேம்படுத்த MPLADS (பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் 5 கோடி வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் 1993-94ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது 5 லட்சமாக இருந்தது. இன்று 5 கோடியாக உயர்ந்துள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon